4.8 C
New York
Monday, December 29, 2025

சிறுவனின் அழைப்புகளால் ஏமாந்த பொலிஸ்.

Thurgau கன்டோனல் பொலிசாருக்கு  புதன்கிழமை ஒரு சிறுவனிடமிருந்து அடுத்தடுத்து பல அவசர அழைப்புகள் வந்தன.

தனது தாயார் எழுந்திருக்கவில்லை என்று அவர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து  ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்ட பொலிசார், அவனது வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.

அவர்கள் சென்ற போது, சிறுவன் அவர்களை  கட்டிப்பிடித்து வரவேற்றான்.

அதிகாரிகளின் வருகை குறித்து அவன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.

விளையாட்டுத்தனமான சிறுவனின் இந்தச் செயலினால் பொலிசார் ஏமாற்றம் அடைந்தனர்.

இதுபோன்ற காரியங்களை இனிமேல் யாரும் முயற்சிக்க வேண்டாம் என்றுபொலிசார் தெரிவித்துள்ளனர்.

மூலம் -Bluewin

Related Articles

Latest Articles