சுவிஸ் தேசிய கவுன்சில் மற்றும் மாநில கவுன்சில் உறுப்பினர்களுக்கு செப்ரெம்பர் மாதத்திற்கான தினசரி கொடுப்பனவுகள் மற்றும் செலவு கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை.
பொறுப்பான மனிதவள அதிகாரியால் கவுன்சில் உறுப்பினர்களுக்கு நேற்று பிற்பகல் மின்னஞ்சல் மூலம் இது தெரிவிக்கப்பட்டது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, செப்டம்பர் மாதத்திற்கான தினசரி கொடுப்பனவுகள் மற்றும் செலவுகளைக் கணக்கிடவில்லை.
மாறாக அனைத்து மாதாந்த நிலையான தொகைகளையும் இரண்டு முறை கணக்கிடப்பட்டுள்ளது.
இதனால் ஒரு பகுதி தொகையை பெற முடியும் என்றும், கணினி சேவை வழங்குநர் முழு வேகத்தில் பிழையை பகுப்பாய்வு செய்கிறார். நிச்சயமாக, அனைத்து கொடுப்பனவுகளும் பின்னர் சரி செய்யப்படும் என்றும் நாடாளுமன்ற சேவைகள் உறுதியளித்துள்ளது.
இதற்காக மன்னிப்பும் கோரப்பட்டுள்ளது.

