4.8 C
New York
Monday, December 29, 2025

யாழ். மாவட்டத்தில் 44 கட்சிகள், குழுக்கள் போட்டி- 2 மனுக்கள் நிராகரிப்பு.

நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 44 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் போட்டியிடுகின்றன.

இன்று நண்பகலுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த நிலையில், 46 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் வேட்புமனுக்களை யாழ். மாவட்டச் செயலகத்தில் சமர்ப்பித்திரந்தன.

அவற்றை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட யாழ். மாவட்ட தேர்தல் அதிகாரிகள், இரண்டு சுயேட்சைக் குழுக்களின் வேட்புமனுக்களை நிராகரித்தனர்.

இதையடுத்து, 44 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் யாழ்ப்பான தேர்தல் மாவட்டத்தில் களத்தில் இருக்கின்றன.

Related Articles

Latest Articles