சூரிச் Altstetten இல் உள்ள பெனடிக்ட் பாடசாலையில் இருந்து இன்று காலை மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
தீ எச்சரிக்கை மணி ஒலித்ததை அடுத்து ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களும், பதறியடித்துக் கொண்டு வெளியேறினர்.
எனினும், இது ஒரு தவறான எச்சரிக்கை என்று பிற்பகலுக்குப் பின்னர் தீயணைப்பு பிரிவினர் கூறினர்.
இதையடுத்து தீயணைப்பு பிரிவினர் அங்கிருந்து விலகிச் சென்றனர்.
மூலம் –zueritoday