15.8 C
New York
Thursday, September 11, 2025

சுவிசில் 4 மடங்காக அதிகரித்த அரிசி விளைச்சல்.

சுவிட்சர்லாந்தில் அரிசி உற்பத்தி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நான்கு மடங்களாக அதிகரித்திருக்கிறது.

2019ஆம் ஆண்டு Fribourg கன்டோனில் உள்ள Lugnorre இல் இரண்டு சகோதரர்கள் முதல் முறையாக நெல்லை விதைத்தனர்.

இரண்டு ஆண்டுகளுக்குமுன்னர் அவர்கள்  Bernese Seeland இல் Kappelen  அருகே Lyss  என்ற இடத்திலும் நெல் விதைப்பில் ஈடுபட்டனர்.

இரண்டு இடங்களிலும் 11 ஏக்கரில் நெல்லை விதைத்த இந்த சகோதரர்களுக்கு இந்த ஆண்டு 40 தொன் நெல் விளைச்சல் கிடைத்துள்ளது.

இதில் பாதிப் பகுதியில் பொதுவான லொடோவகை அரிசியையும், ஏனைய பகுதியில் கறுப்பு அரிசி, ஜப்பானிய குட்டை வகை அரிசி, ஜஸ்மின் அரிசி, விசேட வகையான ரிசோட்டோ அரிசி போன்றவற்றையும் அறுவடை செய்திருக்கிறார்கள்.

சுவிட்சர்லாந்தின் காலநிலை நெல் உற்பத்திக்கு ஏற்றதாக இல்லா விட்டாலும் அதிக விளைச்சல் பெறப்பட்டுள்ளது.

மூலம்- zueritoday

Related Articles

Latest Articles