5.3 C
New York
Tuesday, December 30, 2025

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்- சுட்டவரை விரட்டிப் பிடித்த பொலிஸ்.

Wald இல் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம் அடைந்துள்ளதாக சூரிச் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முற்பகல் 10.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

இந்தச் சம்பவத்தில் 46 வயதுடைய ஒருவர்  காலில் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் மீது 41 வயது இத்தாலியரான ஆண் ஒருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இதையடுத்து  அவரை கைது செய்வதற்கான பொலிஸ் நடவடிக்கையில் பெருமளவு பொலிசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

அங்கிருந்து தப்பிச் சென்ற அவரை, இறுதியில் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தி  கைது செய்துள்ளனர்.

இது ஒரு திட்டமிட்ட தாக்குதலாக இருக்க வாய்ப்பில்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மூலம்- zueritoday

Related Articles

Latest Articles