16.9 C
New York
Thursday, September 11, 2025

பற்றியெரிந்த குடியிருப்பு – இரண்டு பேர் பலி.

Visp இல் உள்ள குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

இன்று அதிகாலை 2:20 மணியளவில் Visp இல் உள்ள கன்டோனல் வீதியில் உள்ள குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக Valais கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.

தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் உடனடியாக வரவழைக்கப்பட்டனர்.

குடியிருப்பு கட்டடத்தின் மேல் தளத்தில் ஏற்பட்ட தீ, விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

மீட்புக் குழுவினர் வளாகத்திற்குள் நுழைந்தபோது ஒருவர் இறந்து கிடந்தார்.

கடுமையான புகையை சுவாசித்ததால்,  ஆபத்தான நிலையில் இருந்த  பெண் ஒருவர் மீட்புப் பணியாளர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், பின்னர் அவர் மரணமானார்.

உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை.

மூலம் –zueritoday

Related Articles

Latest Articles