Winterthur இல் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 17 வயது இளைஞன் படுகாயம் அடைந்துள்ளார்.
நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் Breitestrasse / Untere Vogelsangstrasse சந்திப்பில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஒரே திசையில் பயணித்த காரும் மோட்டார் சைக்கிளும் மோதி இந்த விபத்து நேரிட்டுள்ளது.
விபத்திற்கான காரணம் தெரியவரவில்லை.
விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூலம் -20min