24.6 C
New York
Saturday, October 3, 2026

3 பிரான்ஸ் பொலிசாரை காயப்படுத்திய சுவிஸ் பிரஜை கைது.

பிரான்சின் Lyon இல் Caluire-et-Cuire, இல் உள்ள, பொலிஸ் சோதனைச் சாவடியிலிருந்து தப்பிச் சென்ற சுவிஸ் பிரஜை ஒருவர், பொலிஸ் வாகனத்தின் மீது மோதி சேதப்படுத்தியுள்ளார்.

நேற்று அதிகாலை 1.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

- Advertisement -

பொலிஸ் சோதனைச் சாவடியில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற காரை பொலிஸ் வாகனம் ஒன்று வழி மறித்துள்ளது.

அப்போது, காரில் இருந்தவர் பொலிஸ் காரை வேண்டுமென்றே மோதி சேதப்படுத்தியுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் 3 பொலிசார் காயமடைந்ததுடன் பொலிஸ் வாகனமும் பலத்த சேதம் அடைந்தது.

இதையடுத்து  அந்த நபர் கைது செய்யப்பட்டார். அவர் சுவிஸ் பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளார் என பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மூலம் -20min

Related Articles

Latest Articles