21.6 C
New York
Wednesday, September 10, 2025

3 ஆண்டுகளுக்குப் பின் அதே கட்டடத்தில் மீண்டும் தீவிபத்து.

பேர்னில் உள்ள Weberstrasse இல் நேற்று முன்தினம் அதிகாலை 3.30 மணியளவில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீவிபத்து குறித்து அறிந்ததும் விரைந்து சென்ற தீயணைப்பு பிரிவினர் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு ஆறு பேரை அங்கிருந்து வெளியேற்றினர்.

இதனால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. தீவிபத்துக்கான காரணம் தெரியவரவில்லை.

இதே கட்டடத்தில், 2021ஆம் ஆண்டு நொவம்பர் 10ஆம் திகதி தீவிபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலம் -20min

Related Articles

Latest Articles