-0.1 C
New York
Sunday, December 28, 2025

ட்ராமுக்கு காத்திருந்தவரிடம் கொள்ளையடித்த பெண்.

Basel இல் உள்ள Claraplatz இற்கு அருகே Untere Rebgasse வீதியில் ட்ராம் நிறுத்தத்தில் காத்திருந்த ஒருவரிடம் பெண் ஒருவர் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு இரவு 9 மணிக்கு முன்னதாக இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

ட்ராம் நிறுத்தத்தில் காத்திருந்த நபரை பின்புறமாக தாக்கி விட்டு குறித்த பெண் அலைபேசியை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

இந்தச் கொள்ளை நடந்த போது, 60 வயது மதிக்கத்தக்க நபர் சிறிய காயம் அடைந்தார்.

இதையடுத்து பொலிசார் நடத்திய விசாரணைகளில், கொள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 32 வயதான பெண், குற்றம் நடந்த இடத்திற்கு அருகில் சிறிது நேரத்தில் கைது செய்யப்பட்டார்.

மூலம் -20min

Related Articles

Latest Articles