26.3 C
New York
Monday, June 23, 2025

சால்மோனெல்லா பாதிப்பு- மீளப்பெறப்படும் சான்ட்விச்.

Migros தயாரிப்பான “BléVita Bio Sandwich Sour Cream Onion” இல் சால்மோனெல்லா காணப்பட்டதை அடுத்து, உடனடியாக அவற்றை விற்பனையில் இருந்து விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பு மற்றும் கால்நடை விவகாரங்களுக்கான மத்திய அலுவலகம் இந்தச் சிற்றுண்டியை உட்கொள்ள வேண்டாம் என்று பரிந்துரைத்துள்ளது.

இதனால் உடல்நலப் பாதிப்பு ஏற்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட தயாரிப்புகள் Migros பல்பொருள் அங்காடிகளிலும், சுவிட்சர்லாந்து முழுவதும் Migros இணையத்தளம் மூலமும் விற்கப்பட்டுள்ளது.

உடனடியாக அவற்றின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Migros ஏற்கனவே தயாரிப்புகளை விற்பனையிலிருந்து விலக்கி மீளப்பெறத் தொடங்கியுள்ளது.

சூப்பர் மார்க்கெட்டில் இதனை வாங்கிய வாடிக்கையாளர்கள் அதைத் திருப்பிக் கொடுத்த பணத்தை திரும்பப் பெறலாம். Migros இணையத்தில் தயாரிப்பை வாங்கிய  வாடிக்கையாளர்கள் பணத்தைத் திரும்பப்பெற வாடிக்கையாளர் சேவை மூலம் நேரடியாகத் தொடர்புகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்- zueritoday

Related Articles

Latest Articles