-0.1 C
New York
Sunday, December 28, 2025

ஹமாஸ் தலைவரின் விரலை வெட்டி மரணத்தை உறுதி செய்த இஸ்ரேல்.

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார், இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையின் போது கொல்லப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் ஒக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீதான தாக்குதலின் மூளையாக செயற்பட்டார் என்று  கருதப்படுகிறது.

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார், இஸ்ரேலியப் படையினருடனான மோதலில் கொல்லப்பட்ட நிலையில், அவரது விரல் ஒன்று வெட்டியெடுக்கப்பட்டு மரபணுச் சோதனை நடத்தப்பட்டு அவரது மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொறிவெடிகள் காரணமாக சின்வாரின் சடலத்தை அகற்றுவதில் சிக்கல் இருந்ததாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

அவரது மரணத்தின் பின்னர், சுவிட்சர்லாந்தில் உள்ள யூத சமூகத்திற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் கடுமையாக்கப்படத் தேவையில்லை என இஸ்ரேலிய சமூகங்களின் சுவிஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்கனவே மிகவும் விரிவானவையாக உள்ளன. கூடுதல் நடவடிக்கைகள் எதுவும் தற்போது திட்டமிடப்படவில்லை. என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

மூலம் –Zueritoday

Related Articles

Latest Articles