16.6 C
New York
Wednesday, September 10, 2025

ட்ராம் மோதி மூதாட்டி படுகாயம்.

Muttenz BL இல்  Käppeli ட்ரான் நிலையத்திற்கு அருகே, ட்ராம்  மோதியதில் 82 வயதான பாதசாரி ஒருவர் பலத்த காயமடைந்தார்.

நேற்றுக்காலை 11 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் பாதசாரி, 14 ஆவது ட்ராம் லைனை கடந்து செல்ல முயன்ற போது, அந்த வழியாக வந்த ட்ராம் அவர் மீது மோதியுள்ளது.

ட்ராட் சாரதி பிரேக் போட்ட போதும், சில மீற்றர் தூரத்திற்கு அந்தப் பெண் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

படுகாயம் அடைந்த நிலையில்  அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

ட்ராம் வந்ததை கவனிக்காமல் அவர் பாதையை கடக்க முயன்றதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மூலம் – 20min

Related Articles

Latest Articles