27.7 C
New York
Wednesday, June 18, 2025

கவிழ்ந்தது கவசவாகனம் – 9 இராணுவத்தினர் காயம்.

St. Gallen கன்டோனில் Walenstadt இல் உள்ள இராணுவப் பயிற்சி மைதானத்தில் துருப்புக்காவி கவசவாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 இராணுவத்தினர் காயம் அடைந்தனர்.

நேற்று நண்பகலளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியில் ஈடுபட்டிருந்த போதே துருப்புக்காவி வாகனம் பக்கவாட்டாக சாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

அதில் பயணம் செய்த 9 இராணுவத்தினர் சிறியளவில் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து இராணுவ விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மூலம் –Zueritoday

Related Articles

Latest Articles