ஜெர்மனியில் Peine மாவட்டத்தில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
32 வயதுடைய நபர் நேற்று மதியம் வீதியால் சென்றவர்களை கண்மூடித்தனமாக தாக்கத் தொடங்கினார்.
மூன்று ஆண்களையும் 48 வயதுடைய பெண் ஒருவரையும் அவர் கத்தியால் தாக்கினார் என்றும், அவர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர் என்றும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Peineஐ சேர்ந்த 32 வயதான சந்தேக நபர், எதிர்ப்புகளின்றி, அதிகாரிகளால் அந்த இடத்திலேயே கைது செய்யப்பட்டார்.
குற்றத்தின் பின்னணி குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை எனப் பொலிசார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று ஆரம்ப விசாரணைகள் தெரிவிக்கின்றன.
காயமடைந்த ஆண்கள் மூவரும், 18, 66 மற்றும் 73 வயதுடையவர்கள் என்றும் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.