Graubunden இல் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
23 வயதுடைய ஒருவர் வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில், தனது காரில் 18 வயதுடைய இரண்டு பேரை ஏற்றிக் கொண்டு Bondo நோக்கி பயணம் செய்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கார் தடுப்புச் சுவரில் மோதி பல மீற்றர்களுக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இதன் போது முன் ஆசனங்களில் இருந்த 23 மற்றும் 18 வயதுடைய இரண்டு கோர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
பின் ஆசனத்தில் இருந்த 18 வயதுடைய மற்றொருவர் சிறியளவிலான காயம் அடைந்துள்ளனர்.
விபத்திற்கான காரணம் இன்னமும் தெரியவில்லை.