26.7 C
New York
Thursday, September 11, 2025

Aargau கன்டோன் தேர்தல்களில் SVP ஆதிக்கம் அதிகரிப்பு.

Aargau கன்டோனில்  5 பேர் கொண்ட  புதிய  அரசாங்க  கவுன்சில் மற்றும்  140 பேர் கொண்ட் புதிய நாடாளுமன்றம்  என்பன தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

மார்டினா பிர்ச்சர் (SVP) அரசாங்க  கவுன்சிலின் புதிய உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே உறுப்பினர்களாக இருந்த நான்கு அரசாங்க கவுன்சிலர்களும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Markus Dieth (center, so far): 96,742 votes

Stephan Attiger (FPD, so far): 94,648 votes

Jean-Pierre Gallati (SVP, so far): 86,876 votes

Dieter Egli (SP, so far): 84,254 votes

Martina Bircher (SVP, new): 68,127 votes

ஆகியோர் அரசாங்க கவுன்சில் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கிராண்ட் கவுன்சிலில்  SVP கட்சி ஐந்து  மேலதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அந்தக் கட்சிக்கு 48 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

FDP உடன் இணைந்து  அவர்கள் 71 ஆசனங்களைக் கைப்பற்றி  பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதன் மூலம் கொன்சர்வேட்டிவ்கள், தெளிவான பெரும்பான்மையைப் பெற்றுள்ளனர்.

மையவாத கட்சியும்,  SP கட்சியும் மேலதிக ஆசனங்களைக் கைப்பற்றவோ, இழக்கவோ இல்லை.

கிறீன் கட்சியினர் வாக்குகளை இழந்துள்ளதார், 4 ஆசனங்களையும்,  GLP கட்சி 2 ஆசனங்களையும், EPP  ஆசனத்தையும் இழந்துள்ளன.

மூலம் -20min

Related Articles

Latest Articles