2023ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் 58 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
சுவிசில் ஆண்டு தோறும் சராசரியாக 47 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பது வழமை.
நீண்டகாலமாக நீடிக்கும் இந்த சராசரி எண்ணிக்கையை விட கடந்த ஆண்டு அதிகமானோர் நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக சுவிஸ் உயிர்காப்பு சமூகம் (SLRG) அறிவித்துள்ளது.
பலியானவர்களில் 46 பேர் ஆண்கள், 12 பேர் பெண்கள்.
இதனால் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் அதிகளவானோர், (53 பேர்) திறந்த நீர்ப்பரப்பில் மரணமடைந்தனர்.
அவற்றில் 29 பேர் ஏரிகளிலும் 24 பேர் ஆறுகளிலும் உயிரிழந்தனர்.
நீச்சல் குளங்களில் நான்கு பேர் உயிரிழந்தனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.