சைபர் குற்றவாளிகள் Schaffhausen தொழிற்பயிற்சி மையத்தின் (BBZ) தகவல்தொழில்நுட்ப உள்கட்டமைப்பைத் தாக்கி கப்பம் கோரியுள்ளனர்.
BBZ இன் சேர்வர்களில் என்க்ரிப்ஷன் மல்வேரைப் பயன்படுத்தி இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எனினும், Schaffhausen கன்டோனின் தகவல் தொழில்நுட்பம் இதனால் பாதிக்கப்படவில்லை.
கப்பம் செலுத்துமாறு விடுத்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்று கன்டோனல் கல்வித் துறை இன்று அறிவித்தது.
இந்த தாக்குதல் ஒக்டோபர் 2 ஆம் திகதி நடந்தது என்றும், அடுத்த நாள் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.
உள் மற்றும் வெளி நிபுணர்களின் ஒத்துழைப்புடன் மற்றும் காவல்துறையுடன் கலந்தாலோசித்து, தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேலும் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை BBZ தொடங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- Zueritoday