Basel-Stadt இல், கன்டோனல் நாடாளுமன்றம் மற்றும் அரசாங்க கவுன்சில் என்பனவற்றுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, ஆட்சி அமைப்பில் எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை.
கிரான்ட் கவுன்சில் தேர்தலில், SP கட்சி ஒரு ஆசனத்தை மேலதிகமாக கைப்பற்றி 31 இடங்களில் வெற்றியை உறுதி செய்துள்ளது.
LDP கட்சி 2 ஆசனங்களை இழந்து அதன் பலம், 12 ஆக குறைந்துள்ளது.
SVP மற்றும் GRUNE கட்சிகள் தலா 12 ஆசனங்களையும், FDP, Mitte,GLP கட்சிகள் தலா 6 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.
இந்த தேர்தலில் இடதுசாரி முகாம் 49 இடங்களிலும், முதலாளித்துவ முகாம் 43 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
மூலம் -20min