26.7 C
New York
Thursday, September 11, 2025

போதைப்பொருள் வியாபாரிகளான 2 பெண்கள் கைது.

சூரிச் நகரப் பொலிசார் போதைப்பொருள் வியாபாரிகளான இரண்டு பெண்களை மாவட்டம் 4 இல் கைது செய்துள்ளனர்.

சனிக்கிழமை இரவு 9.45 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த கைது நடவடிக்கையின் போது, பெருமளவிலான கொகெய்ன் மற்றும் வேறு போதைப்பொருட்களையும்,  பணத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

Lagerstrasse இல், சிவில் உடையில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் போதைப்பொருள் ஒப்படைப்பதைக் கவனித்தனர்.

அவர்களைத் தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது, முதுகுப்பையில் இருந்து 120 கிராம் கொகெய்னை  கைப்பற்றினர்.

இதையடுத்து, 25 வயதான கொலம்பியரான பெண்ணையும், 51 வயதான சுவிஸ் பெண்ணையும் கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

விசாரணைகளை அடுத்து, மாவட்டம் 11 இல் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தப்பட்டு,  மூன்று கிலோகிராம் கொகெய்ன், சிறிய அளவிலான MDMA மற்றும் எக்ஸ்டசி, போதைப் பொருட்களையும்,  15,000க்கும் அதிகமான சுவிஸ் பிராங்குகள் மற்றும் சுமார் 30,000 யூரோக்கள் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட பெண்கள் சூரிச் சட்டமா அதிபர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

மூலம் – zueritoday

Related Articles

Latest Articles