கடந்த 20ஆம் திகதி நடந்த Basel-Stadt கன்டோன் தேர்தலில் பதிவாகிய வாக்குகள் தொடர்பான புள்ளிவிபரங்களில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
தேர்தலுக்கு முன்னர், கடந்த வெள்ளிக்கிழமை 45.5 வீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் ஞாயிற்றுக்கிழமை வாக்களிப்பு முடிந்த பின்னர், 44.79 வீத வாக்குகளே பதிவாகியிருந்தன.
இது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் தேர்தலுக்கு முன்னர் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை, 45.5 வீத வாக்குகள் பதிவானதாக வெளியான தகவல் தவறு என்றும் அப்போது. 37.4 வீத வாக்குகளே பதிவாகியிருந்தன என்றும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மூலம்- 20min