சுவிட்சர்லாந்தில் சுமார் 15 பில்லியன் பிராங் மதிப்புள்ள 200 தொன் தங்கம் தனியாருக்குச் சொந்தமானதாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஐந்தில் ஒரு பகுதியை உரிமையாளர்கள் வீட்டில் சேமித்து வைத்துள்ளனர்.
பெறுமதிமிக்க உலோகங்கள் விற்பனையாளரான Philoro சார்பாக, St Gallen பல்கலைக்கழகம் (HSG) நடத்திய “பெறுமதிமிக்க உலோகங்கள் ஆய்வு 2024” இன் படியே இது கணிக்கப்பட்டுள்ளது.
3,000 பேர் பங்கேற்ற இந்தக் கணக்கெடுப்பின் அடிப்படையில், செய்யப்பட்ட மதிப்பீட்டின்படி, சுமார் 22 வீதமானோர், தனிநபருக்கு சராசரியாக 7,521 பிராங் மதிப்புள்ள 101 கிராம் தங்கத்தை வைத்திருக்கின்றனர்.
இருப்பினும், நகை வடிவில் உள்ள தங்கம் இந்தக் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம் –swissinfo