26.7 C
New York
Thursday, September 11, 2025

சுவிசின் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரிப்பு – புலனாய்வுத் தகவல்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த அளவை விட இப்போது,  சுவிட்சர்லாந்தின் பாதுகாப்பு கணிசமாக குறைந்துள்ளதாக  , புலனாய்வு சேவையின் அண்மைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு அரசுகள் சுவிட்சர்லாந்தில் இருந்து உளவு மற்றும் பிரச்சாரத்தை அதிகளவில் முன்னெடுத்து வருவதாகவும், பயங்கரவாத அச்சுறுத்தல் தீவிரமடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ஆண்டு அறிக்கை,  2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து,  ஜிஹாதி  செயற்பாடுகள் தீவிரமாக அதிகரித்திருப்பதாக Federal Intelligence Service (FIS) அமைப்பு தெரிவித்துள்ளது.

சிறார்கள் தீவிரமயமாக்கப்படுவது அதிகரித்துள்ளது. இது இணையவழியில்  குறுகிய கால இடைவெளியில் நடைபெறுவதுடன்,  பயங்கரவாத தாக்குதலுக்கு வழிவகுக்கும்.

குறிப்பாக யூத மற்றும் இஸ்ரேலிய நலன்கள்  மட்டுமன்றி சுவிட்சர்லாந்தும் கூட பாதிக்கப்படும்.

FIS இன்  அறிக்கையின்படி  “பல அச்சுறுத்தல்கள்” உள்ளன.

இதில் ரஷ்ய செல்வாக்கு நடவடிக்கைகள், உளவு பார்த்தல், ஆயுதங்களின் பெருக்கம் மற்றும் வன்முறை வலதுசாரி மற்றும் இடதுசாரி தீவிரவாதம் ஆகியவையும் அடங்கும்.

தற்போதைய FIS நிலைமை அறிக்கை  மொத்தம் 48 தலைப்புகளை உள்ளடக்கியுள்ளது..

மூலம் –swissinfo

Related Articles

Latest Articles