Adlikon ZH இல் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்களை ரொட்வீலர் நாய் கடித்துக் குதறியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் 5 வயதுடைய ஓட்டிசம் பாதிப்புக்குள்ளாகிய காலித் என்ற சிறுவனும், 7 வயதுடைய சாரா என்ற சிறுமியும் காயம் அடைந்துள்ளனர்.
இவர்களின் தந்தை வீட்டு முற்றத்தில் சிறுவர்களை விளையாடுவதற்கு விட்டு விட்டு உள்ளே சென்ற போது ரொட்வீலர் நாய் அவர்களை தாக்கியுள்ளது.
உடனடியாக தந்தை விரைந்து சென்று சுத்தியலைக் கொண்டு நாயை விரட்டியுள்ளார்.
பின்னர் பொலிசார் சம்பவ இடத்திற்குச் சென்று நாளை கட்டுப்படுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தின் போது பெண் பொலிசார் ஒருவரும் காயம் அடைந்துள்ளார்.
சிரியாவில் போரில் இருந்து தப்பி வந்த குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளே நாயினால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளனர்.
சிறுவன் காலித்தின் வலது கையிலும் முகத்திலும் மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
கையில் ஏற்பட்டுள்ள மோசமான காயத்திற்கு நான்கு மணிநேரம் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
சிறுவனுக்கு கை முறிந்துள்ளதாகவும், நரம்பு அறுந்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறிய தந்தை, அவனது கை மீண்டும் வழமைக்குத் திரும்பும் என இப்போது கூற முடியாது என மருத்துவர்கள் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
மூலம் – zueritoday