Adlikon இல் திங்கட்கிழமை இரண்டு குழந்தைகளை தாக்கி படுகாயப்படுத்திய ரொட்வீலர் நாயின் உரிமையாளருக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயதுடைய சாரா மற்றும் 5 வயதுடைய காலித் ஆகிய சிறுவர்களை ரொட்வீலர் நாய் கடித்துக் குதறிப் படுகாயப்படுத்தியது.
இந்த நிலையில் நாயின் உரிமையாளருக்கு எதிராக காயமடைந்த சிறுவர்களின் பெற்றோர், பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.
இதுகுறித்து சூரிச் கன்டோனல் பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
மூலம் – zueritoday