16.6 C
New York
Thursday, September 11, 2025

குடும்ப வன்முறையில் பெண் மரணம்.

Ried-Brig இல் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற குடும்ப வன்முறையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புதன்கிழமை மாலை   5:45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Ried-Brig VS நகராட்சியில் உள்ள குடியிருப்பு கட்டடத்துக்கு  Valais கன்டோனல் பொலிசார் மற்றும் Brig  நகர பொலிசார் சென்ற போது, பெண் ஒருவரின் சடலத்தை  கண்டுபிடித்தனர்.

உயிரிழந்தவர் 61 வயதுடைய சுவிஸ் நாட்டுப் பெண் என்று பொலிசார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பா, 63 வயதான சுவிஸ் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, சட்டமா அதிபரின் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மூலம்- 20min. 

Related Articles

Latest Articles