16.9 C
New York
Thursday, September 11, 2025

49 நாட்களாக காணாமல் போன ஜனாதிபதி- ஜெனிவாவில் தங்கியிருந்தது அம்பலம்.

உலகின் மிக வயதான அரச தலைவரான, கமரூன் ஜனாதிபதி போல் பியா, 49 நாட்களாக காணாமல்போயிருந்த நிலையில்,  ஜெனிவா ஹோட்டலில் தங்கியிருந்தார் என்பது தெரியவந்துள்ளது.

1982ஆம் ஆண்டில் இருந்து. 42 ஆண்டுகளாக கமரூன் ஜனாதிபதியாக, பதவி வகிக்கும் போல் பியா,  அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடவுள்ளார்.

91 வயதான போல் பியா அண்மையில் வெளிநாடு சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார்.

49 நாட்களாக அவர் எங்கிருக்கிறார் என்று தெரியாத நிலை காணப்பட்டது.

இந்த நிலையில் ஜெனிவா ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த அவர் திங்கட்கிழமை நாடு திரும்பியது நாட்டு மக்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

எனினும் அவரது உடல் நிலை உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள், ஊகங்களை வெளியிட அரசாங்கம் தடைவிதித்துள்ளது.

பொது வெளியில் அவர் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டவராகவும், சில சமயங்களில் குழப்பமானவராகவும், தூக்கத்தில் இருப்பதாகவும் தோன்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்- 20min. 

Related Articles

Latest Articles