சல்மோனெல்லாவினால், மாசுபடுவதற்கான சாத்தியம் இருப்பதால், Bio Natura creamed spinach கீரையை திரும்பப் பெறுவதாக Aldi Suisse, தெரிவித்துள்ளது.
Aldi Suisse இல் விற்கப்படும் இந்த பயோ நேச்சுரா கிரீம் செய்யப்பட்ட கீரையில் சல்மோனெல்லா கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் உடல்நல பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுவதை நிராகரிக்க முடியாது என உணவுப் பாதுகாப்புக்கான பெடரல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜூன் 2026க்கு முந்தைய காலாவதி திகதியுடன் கூடிய 500 கிராம் பொதிகளே பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட இந்த தயாரிப்பை உட்கொள்ள வேண்டாம் என்று BLV பரிந்துரைத்துள்ளது.
இதையடுத்து, Aldi Suisse உடனடியாக இந்த தயாரிப்புகளை விற்பனையில் இருந்து விலக்கி, திரும்பப்பெறத் தொடங்கியுள்ளது.
சல்மோனெல்லா என்பது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நோய்களை உண்டாக்கும் பக்டீரியாவகையாகும்.
இதனால் காய்ச்சல் மற்றும் வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சினைகளை 6 முதல் 72 மணி நேரத்திற்குள் எதிர்கொள்ள நேரிடும்.
இந்த தயாரிப்பை உட்கொண்டவர்கள் குறிப்பிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.
மூலம்- 20min.