Beringen இல், இரண்டு கார்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
புதன்கிழமை பிற்பகல் 3:45 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
31 வயதுடைய சாரதி ஒருவர் ஒட்டி வந்த வாகனம் எதிர்த்திசையில் 28 வயதுடைய சாரதி ஒருவர் ஓட்டி வந்த வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து நேரிட்டுள்ளது.
எனினும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
விபத்துக்கான காரணம் குறித்து Schaffhausen பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலம்- zueritoday