Schaffhausen நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் 10,000 பிராங்குகளுக்கு மேல் மதிப்புள்ள பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
அத்துடன் அங்கிருந்த ஏராளமான சொத்துக்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.
வியாழக்கிழமை இரவு 10 மணிக்கும், வெள்ளிக்கிழமை அதிகாலை 5.15 மணிக்கும் இடையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஹோட்டலின் சமையலமைக்குள்ளே இருந்தும், வரவேற்பறையில் இருந்தும் திருடர்கள் பணத்தைக் கொள்ளையிட்டுள்ளனர்.
மூலம்- zueritoday