25 கிலோ கெட்டமைன் போதைபொருளை கடத்த முயன்ற அமெரிக்க பெண் ஒருவர், சூரிச் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தனது சூட்கேசில் பொதி செய்யப்பட்ட நிலையில் போதைபொருளை கொண்டு செல்ல முயன்ற போது, விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் சோதனையில் சிக்கியுள்ளார்.
பொதியிடப்பட்ட நிலையில் இருந்த வெள்ளை நிற தூளை ஆய்வுக்கு உட்படுத்தியபோது அது போதைப்பொருள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
25 வயதான அந்த அமெரிக்க பெண் சூரிச்சில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு செல்லவிருந்தார் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூலம் – Zueritoday