2023 ஆம் ஆண்டு, சுவிட்சர்லாந்தில் ஏழு பேரில் ஒருவர் தங்களின் வேலையை மாற்றிக் கொண்டிருப்பதாக, பெடரல் புள்ளி விபரவியல் பணியகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு வேலையை மாற்றிக் கொண்டவர்களில் நான்கில் ஒரு பங்கினர், 15 தொடக்கம் 23 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலையை மாற்றிக் கொண்டவர்களில் 15.1 வீதமானோர் தங்கள் வேலையின் தரத்தை 10% உயர்த்தியிருக்கிறார்கள்.
அதேவேளை 38.1 வீதமானோர், வேலை மாற்றத்தின் மூலமாக 10 வீதம் அதிகமான சம்பளத்தை பெற்றுக் கொண்டிருகிறார்கள் என்றும் பெடரல் புள்ளிவிபரவியல் பணியகம் தெரிவித்துள்ளார்.
மூலம் – swissinfo