நைஜீரியர் ஒருவரின் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து, 1.2 கிலோகிராம் கொக்கைன் மற்றும் ஏராளமான பணத்தை Winterthur நகர பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
செவ்வாய்கிழமை மாலை 6 மணியளவில், 54 வயதுடைய போதைப் பொருள் பயன்படுத்து சுவிஸ் ஆண் ஒருவரிடம் இருந்து சிறிய அளவிலான கொக்கைன் போதைப்பொருளை பொலிசார் கைப்பற்றியிருந்தனர்.
அவரைக் கைது செய்து விசாரித்த போது, தாம் போதைப் பொருளை வாங்கிய இடம் பற்றிய தகவலை கொடுத்தனர்.
இதையடுத்து 32 வயதுடைய நைஜீரியரின் அடுக்குமாடிக் குடியிருப்பில் பொலிசார் தேடுதல் நடத்தினர்.
அங்கு .2 கிலோகிராம் கொக்கைன் மற்றும் ஏராளமான பணத்தை அவர்கள் கைப்பற்றினர். அங்கிருந்த 32 வயதுடைய நைஜீரியரையும், 39 வயதுடைய இன்னொருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
மூலம் -Zueritoday