15.7 C
New York
Monday, September 28, 2026

மீண்டும் அதிகரித்த கோவிட் – வேகமாக பரவும் புதிய திரிபு.

சுவிட்சர்லாந்தில் மீண்டும் கோவிட் -19  தொற்று அதிகரித்து வருவதாக பெடரல் பொது சுகாதாரப் பணியகம் எச்சரித்துள்ளது.

கடந்த ஏழு நாட்களில் தொற்றாளர் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

- Advertisement -

தற்போது, KP.3 என்ற வகை திரிபு ஆதிக்கம் செலுத்தினாலும், XEC  எனப்படும் கோவிட்டின்  புதிய திரிபு, அதிகளவில் பரவத் தொடங்கியுள்ளது.

XEC  திரிபினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு,  வாசனை மற்றும் சுவை இழப்பு போன்ற, கோவிட்-19இன் பழைய அறிகுறிகள் காணப்படுகின்றன.  அத்துடன் பசியின்மையையும் ஏற்படுத்துகிறது.

XEC மிகவும் கடுமையான நோயை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கவில்லை.

ஆபத்தில்  நிலையில் உள்ளவர்கள், தடுப்பூசி போட வேண்டும் என்று BAG பரிந்துரைத்துள்ளது.

மூலம் -20min.

Related Articles

Latest Articles