Baar இல் நேற்று அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் இருந்து ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவசர தகவலை அடுத்து Zug பொலிஸ் அதிகாரிகள் அடுக்குமாடிக் குடியிருப்புக்குச் சென்ற போது அங்கு 72 வயதுடைய ஒருவர் சடலமாக கிடந்தார்.
அவர் கொலை செய்யப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் இருந்து 42 வயதான ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருவரும் உறவு முறையானவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நபரே பொலிசாரை அழைத்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
மூலம் – Zueritoday