சைபர் தாக்குதல் மூலம், ஹக்கர் ஒருவர் OneLog இணைப்பு தளத்தை முடக்கி, பல சுவிஸ் ஊடகத் தலைப்புகளை அணுகும் வாய்ப்புகளைத் தடுத்துள்ளார்.
வியாழன் முதல் OneLog மூலமாக இணைப்பை ஏற்படுத்த முடியவில்லை என்று ஊடக நிறுவனமான Tamedia தெரிவித்துள்ளது.
நேற்று மதியம் வரை இந்தப் பிரச்சினை நீடித்தது.
இதனால், Tamedia அதன் தலைப்புகளின் உள்ளடக்கத்தை தற்காலிகமாக சுதந்திரமாக அணுகக் கூடியதாக மாற்றியுள்ளது.
மற்ற ஊடக நிறுவனங்களும் சந்தாதாரர்களுக்கு தங்கள் உள்ளடக்கத்திற்கான அணுகலை உத்தரவாதம் செய்ய இதே போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
ஹக் செய்யப்பட்டதால், சில கட்டுரைகளில் இனி வழக்கம் போல் கருத்து தெரிவிக்க முடியாமல் உள்ளது.
OneLog வழியாக இணைக்கப்பட்டுள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட OneLog சேவையானது முக்கிய ஊடக நிறுவனங்களான Tamedia, Ringier மற்றும் SSR உட்பட 40 க்கும் மேற்பட்ட இணைய ஊடக நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது.
மூலம்- Swissinfo