இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் ஜெர்மனிக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 53,410 பேர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களில் 28,321 திருப்பி அனுப்பப்பட்டனர் என்றும், அவர்களில் பெரும்பாலானோர் சுவிட்சர்லாந்து வழியாக நுழைய முயன்றவர்கள் என்றும் Bild am Sonntag, என்ற ஜெர்மன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
சுவிஸ் எல்லை வழியாக நுழைய முயன்று திருப்பி அனுப்பப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,113 என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
போலந்து வழியாக 7,862 பேரும், ஒஸ்ரியா வழியாக 5,468 பேரும், பிரான்ஸ் வழியாக 2,350 பேரும் நுழைய முயன்று திருப்பி அனுப்பப்பட்டனர்.
இவ்வாறு திருப்பி அனுபப்பட்டவர்களில் 5,935 பேர் உக்ரைனையும், 4,709 பேர் சிரியாவையும், 2,396 பேர் ஆப்கானிஸ்தானையும் சேர்ந்தவர்கள்.
தடைவிதிக்கப்பட்ட பின்னர் மீள நுழைய முயன்றதாக 1,482 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம் -Swissinfo