வேலை செய்வதற்கு தயங்கும் உக்ரைனியர்களுக்கு எதிராக சுவிஸ் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.
வேலைக்குச் செல்லாமல் இருக்கு உக்ரைனியர்களை வேலைக்கு செல்ல அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் இறங்கவுள்ளது.
உக்ரைனிய அகதிகள் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளில் பங்கேற்கக் கடமைப்பட்டிருக்க வேண்டும் என்று அரசாங்கம் செப்டம்பர் இறுதியில், அறிவித்தது.
அவ்வாறு உக்ரேனியர்கள் ஒருங்கிணைக்கவில்லை என்றால் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்வதைத் தவிர வேறு தெரிவு எதுவும் இல்லை என்றும், இதில் சமூக நலன்களின் வெட்டுக்களும் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரேனியர், மொழிப் பாடத்தில் கலந்து கொள்ள மறுத்தால், அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.
அகதிகள் மற்றும் தற்காலிக அனுமதி பெற்றவர்கள் உட்பட சமூக உதவி பெறுபவர்களுக்கு அதே விதிமுறைகள் பொருந்தும்.
ஒருங்கிணைப்பு ஆணையின்படி அவர்கள் தண்டிக்கப்படலாம்.
மூலம் – 20min