Zufikon இல் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் காயம் அடைந்தனர்.
நேற்று அதிகாலை 2.50 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக Aargau பொலிசார் தெரிவித்தனர்.
25 வயது சாரதி ஒருவர் ஓட்டி வந்த Mercedes கார் கட்டுப்பாட்டை இழந்து, எதிர்த் திசையில் பயணித்துக் கொண்டிருந்த வாகனம் ஒன்றுடன் மோதியது.
இந்தச் சம்பவத்தில் இரண்டு கார்களிலும் இருந்த 4 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Mercedes காரை ஓட்டிய சாரதியின் அனுமதிப்பத்திரம், தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
மூலம் -zueritoday.