சுவிஸ் எயர்லைன்ஸ் (SWISS) நிறுவனம், இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கான விமான சேவைகளை தொடர்ந்து இடைநிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
விமான சேவை இடைநிறுத்தம் நவம்பர் 25 ஆம் திகதி வரை நீடிக்கப்படுவதாக SWISS விமான நிறுவனம் அறிவித்தது.
நிலைமையை முழுமையாக ஆராய்ந்த பின்னர் இந்த முடிவை எடுத்ததாக SWISS விளக்கமளித்துள்ளது.
செப்டம்பர் 18 ஆம் திகதி முதல் SWISS நிறுவனம், டெல் அவிவ்வுக்கான விமான சேவைகளை இடைநிறுத்தியது.
அதேவேளை, லெபனான் தலைநகர் பெய்ரூட்டுக்கான விமான சேவைகளை ஜனவரி 18 ஆம் திகதி வரை இடைநிறுத்தி வைப்பதாக SWISS நிறுவனம் கடந்த வாரம் அறிவித்திருந்தது.
மூலம் – Swissinfo

