6.8 C
New York
Monday, December 29, 2025

சுவிசில் சைவ உணவு சாப்பிடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு.

சுவிட்சர்லாந்தில் மாமிச உணவைத் தவிர்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, தாவர அடிப்படையிலான உணவை ஊக்குவிக்கும் Swissveg சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் சைவ உணவு உண்பவர்கள் மற்றும் தாவர உணவு உண்பவர்களின் எண்ணிக்கை சுமார் 40% அதிகரித்துள்ளது.

2024 இல், 2.9% ஆண்களும், 6.3% பெண்களும், அசைவ உணவு உண்பதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

தாவர உணவு உண்பவர்களின் சதவீதம் ஆண்களில் 0.5% மற்றும் பெண்களில் 0.9%, ஆகும்.

30,000 க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்ற கணக்கெடுப்பின் அடிப்படையில் இது கண்டறியப்பட்டுள்ளதாக Swissveg அறிக்கை, கூறுகிறது.

பொதுவாக, சுவிட்சர்லாந்தில் 19 பேரில் ஒருவர் இனி இறைச்சி சாப்பிடுவதில்லை என்று World Vegan Dayயை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் அந்தச் சங்கம் கூறுகிறது.

மூலம் -Swissinfo

Related Articles

Latest Articles