அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் தன் மீது பாலியல் துன்புறுத்தல் செய்ததாக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
1993 ஆம் ஆண்டு நியூயோர்க்கில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக, முன்னாள் மிஸ் சுவிட்சர்லாந்து போட்டியாளரான பெண் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
Beatrice Keul, என்ற தற்போது 53 வயதுடைய அந்தப் பெண், RTS தொலைக்காட்சியிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.
22 வயதாக இருக்கும் போது, மன்ஹாட்டனில் உள்ள ஹொட்டேலுக்கு அழைத்து ட்ரம்ப் தன் மீது அத்துமீறி நடந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நான் மிகவும் அதிர்ஷ்டசாலி, ஏனென்றால் என்னை தற்காத்துக் கொள்ள முடிந்தது. குறிப்பாக எனது உயரத்திற்கு நன்றி சொல்ல வேண்டும்.“ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்பின் பிரச்சாரக் குழு இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.
மூலம்- swissinfo

