சுவிட்சர்லாந்தில் சுமார் 300 மருந்துகளுக்கு விலை குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சராசரியாக, இந்த மருந்துகளின் விலை 12 சதவீதம் மலிவானதாக இருக்கும் என பொது சுகாதார சமஷ்டி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் குறைந்தது 90 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் சேமிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு மதிப்பீடு செய்யப்பட்ட மருந்துகள், தோல் நோய்கள் , நரம்பு மண்டலம் மற்றும் இரத்த நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகின்றன,
இந்த விலைக் குறைப்பு டிசம்பர் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்.
மூலம் – Zueritoday

