22.5 C
New York
Tuesday, September 9, 2025

வீட்டின் மீது மோதிய கார்.

சூரிச்சின் 11வது மாவட்டத்தில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, வீடு ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்றுக்காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Seebacherplatz நோக்கி அந்தக் காரை 20 வயதுடைய ஒருவர் ஓட்டிச் சென்ற போதே கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் வீட்டின் முகப்புப் பகுதியும், BMW காரும் பலத்த சேதம் அடைந்திருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனால், Neubrunnenstrasse  இல் இருந்து Seebacherplatz இற்கான போக்குவரத்து தடைப்பட்டது.

மூலம்- Zueritoday

Related Articles

Latest Articles