-4.8 C
New York
Sunday, December 28, 2025

காற்றாலை திட்டம் தொடருமா? – 24ஆம் திகதி வாக்கெடுப்பு.

Thundorf இல் உள்ள வாக்காளர்கள் தங்கள் பகுதியில், திட்டமிடப்பட்டுள்ள காற்றாலைத் திட்டத்தை தொடர்வதா என்பது குறித்து நவம்பர் 24 ஆம் திகதி நடக்கவுள்ள பொது வாக்கெடுப்பில் வாக்களிக்கவுள்ளனர்.

Thurgau மற்றும் Zurich மின்சார நிறுவனங்கள் Thundorf இற்கு வடக்கே Wellenberg இல், மூன்று காற்றாலைகளை நிறுவத் திட்டமிட்டுள்ளன.

இவற்றின் மூலம், ஆண்டுக்கு சுமார் 25 முதல் 30 GWh மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

இது சுமார் 24,000 மக்களுக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றலை வழங்க முடியும் என அந்த நிறுவனங்கள் கூறுகின்றன.

முதலில் முன்வைக்கப்பட்ட மிகப்பெரியதாக இருந்த நிலையில், மக்களிடமிருந்து எதிர்ப்பை சந்தித்தது.

பெரும்பான்மையான Thundorf வாக்காளர்கள் காற்றாலைகள்,அமைக்கப்படும் இடத்தில் இருந்து, 850 மீட்டர் சுற்றளவில் மக்கள் வசிக்கும் கட்டடங்கள் எதுவும் இருக்கக்கூடாது என்று தெரிவித்தனர்.

மக்களின் எதிர்ப்பிற்குப் பிறகு, மின்சார நிறுவனங்கள் தங்கள் கூட்டுத் திட்டத்தின் அளவைக் குறைத்தன.

எனினும் 104 வாக்காளர்கள் கூட்டாக எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், பொதுவாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

மூலம்- Zueritoday

Related Articles

Latest Articles