Obwaldenஇல் உள்ள Alpnach விமான நிலையத்தில் தரையிறங்கிய இராணுவ ஹெலிகொப்டர் தரையில் மோதி விபத்துக்குள்ளாகி சேதம் அடைந்துள்ளது.
எனினும், இரண்டு விமானிகளும் தாங்களாகவே வெளியேறியுள்ளனர்.
பரிசோதனைக்காக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
Graubünden கன்டோனல் பொலிசாருக்கு பயிற்சி அளித்து விட்டுத் திரும்பும் போது, புதன்னிழமை இரவு 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது
EC635 என்ற அந்த இரண்டு ஹெலிகொப்டரில் இரண்டு விமானிகளும் மட்டும் இருந்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இராணுவ விசாரணைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மூலம்- zueritoday