அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதால், சுவிசில் X தளத்தில் இருந்து முக்கிய அரசியல்வாதிகள் பலர் வெளியேறியுள்ளனர்.
X தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க், டொனால்ட் ட்ரம்பிற்கு ஆதரவு வழங்கியிருந்தார்.
இதற்காக அவர் பெருமளவில் நிதியுதவியையும் வழங்கினார்.
ட்ரம்பின் வெற்றியைத் தொடர்ந்து, எலான் மஸ்க் நடத்தும் X தளத்தில் இருந்து வெளியேறுவதாக சூரிச் தேசிய சபையின் இடதுசாரி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் அறிவித்துள்ளனர்.
SP கட்சியின் இணைத் தலைவரான Mattea Meyer, புதன்கிழமை முதல் X இல் இருந்து வெளியேறி விட்டதாக, அறிவித்துள்ளார்.
சூரிச் SP கட்சியின் தேசிய கவுன்சில் உறுப்பினரான Min Li Marti யும் படிப்படியாக X இல் இருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளார்.
2022 ஏப்ரலில், எலான் ட்விட்டரை வாங்கிய பின்னர், தளம் மில்லியன் கணக்கான பயனர்களை இழந்துவிட்டது.
2023 ஓகஸ்ட் முதல், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள ஆறு சதவீத பயனர்கள் X-ஐ விட்டு வெளியேறியுள்ளனர்.
மூலம்- zueritoday