20.1 C
New York
Wednesday, September 10, 2025

இரசாயனக் கசிவா? – மக்கள் திணறல்.

Thurgau கன்டோனில் உள்ளFrauenfeld மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் வசிப்பவர்கள் நேற்றுக்காலை காற்றில் சந்தேகத்திற்கிடமான இரசாயன வாசனை இருப்பதாக தெரிவித்தனர்.

இதையடுத்து சுற்றுச்சூழல் அதிகாரிகள், மேற்கொண்ட அளவீடுகளில், அப்பகுதியில் நுண்ணிய தூசியின் செறிவு அதிகரித்தது தெரியவந்தது.

சுற்றுச்சூழல் அமைப்பின் கூற்றுப்படி, மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் பொதுமக்கள் மத்தியில் இரசாயன கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் காணப்படுகிறது.

மூலம் – 20min

Related Articles

Latest Articles